கூடலூர் அருகே வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு


கூடலூர் அருகே வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 11 March 2021 8:16 PM IST (Updated: 11 March 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வீடு புகுந்து 8 பவுன் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஜூட் பெரோஸ்ஷா. கூடலூரில் உள்ள தனியார் பள்ளி கூடத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கோவைக்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர் நேற்று அதிகாலை 2 மணிக்கு வீடு திரும்பினார். 

அப்போது வீட்டுக்குள் இருந்த பீரோவை யாரோ உடைத்து இருந்தது தெரியவந்தது. மேலும் அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் திருடு போனதை அறிந்தார். இதுகுறித்து தேவாலா போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு அமீர் அகமது தலைமையிலான போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். 

அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு மர்ம ஆசாமி உள்ளே புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பதிவான கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்த தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story