136 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
136 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன
ராமநாதபுரம்,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அந்தந்த பகுதி காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்ற மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உரிமம் பெற்று 166 பேர் துப்பாக்கி வைத்துள்ள நிலையில் இதுவரை 136 துப்பாக்கிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 30 துப்பாக்கிகள் வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட அவசர அத்தியாவசிய பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story