ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா?


ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா?
x
தினத்தந்தி 11 March 2021 9:18 PM IST (Updated: 11 March 2021 9:18 PM IST)
t-max-icont-min-icon

சேஷமூலை ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திட்டச்சேரி:
சேஷமூலை ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
நாகை மாவட்டம் திருமருகல் அருகே சேஷமூலை ஊராட்சி விஸ்வநாதபுரம் பிள்ளையார்கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக 30 ஆயிரம் கொள்ளளவு ெகாண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30,800 செலவில் சீரமைப்பு செய்யப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் பிள்ளையார் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.மேலும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் இடித்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் குடிநீர் தொட்டி எப்போது இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
நடவடிக்கை
இந்த தொட்டியின் அருகே குடியிருப்புகள் அமைத்துள்ளதால் சிறுவர், சிறுமிகள் இதன் அருகே ஆபத்தை உணராமல் விளையாடி கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story