கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 March 2021 9:25 PM IST (Updated: 11 March 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள விளத்தூர் சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாணிக்கம் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது முதுகுளத்தூர் தாலுகா தட்டானேந்தல் கிராமத்தை சேர்ந்த கருவேல்கனி (வயது27), பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (25) ஆகிய 2 பேரும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பாலன் நகரை சேர்ந்த சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Next Story