திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணியும் வேகமெடுத்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை, அவினாசி அரசு மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனை, பல்லடம் அரசு மருத்துவமனை, ஊத்துக்குளி அரசு மருத்துவமனை, சேவூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், பெருமாநல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், கணியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், பொங்கலூர் ஆரம்ப சுகாதார நிலையம், செம்மிபாளையம், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்.
எரிசனம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், குடிமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், குன்னத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், பொன்னாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், தாயம்பாளையம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம், மூலனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், டி.எஸ்.கே. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், பி.ஆர்.எம்.எச். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மேட்டுப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 23 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
4 அரசு மருத்துவமனைகளுக்கு அனுமதி
இந்த நிலையில் தற்போது மேலும் 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மடத்துக்குளம் அரசு மருத்துவமனை, காங்கேயம் அரசு மருத்துவமனை, ஜல்லிபட்டி அரசு மருத்துவமனை, கரடிவாவி அரசு மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளிலும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இதில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 60 வயது வரை நீரிழிவு நோய் உள்ளிட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தினர். இதுபோல் மாவட்டம் முழுவதும் 24 மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கி, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story