சங்கராபுரத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்


சங்கராபுரத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 11 March 2021 10:12 PM IST (Updated: 11 March 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

சங்கராபுரம்

சங்கராபுரம் பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் ஜனார்த்தனன், பொது சேவை நிர்வாகிகள் சுதாகரன், சேகர், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் குசேலன் வரவேற்றார். சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேல் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து 100 சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை பற்றி பேசினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சையத்காதர், சத்யநாராயணன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.  சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மும்முனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், தலைமையாசிரியர் சீனுவாசன், வருவாய் ஆய்வாளர் திருமால், கிராம நிர்வாக அலுவலர் நிமிலன், பொதுசேவை அமைப்பின் நிர்வாகிகள் சீனிவாசன், ராஜலட்சுமி, சரவணதேவி, சக்திவேல், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story