வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதியில் எல்லை கோடு
வேட்பு மனுதாக்கல் செய்யும் பகுதிகளில் எல்லை கோடு போடப்பட்டது.
கோவை,
தமிழக சட்டசபைக்கான ஓட்டுப்பதிவு அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் செய்யும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 19-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 1,050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்பதால், கடந்த சட்டசபை தேர்தலைவிட இந்த தேர்தலில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
எல்லைக்கோடு போடும் பணி
இதன்படி 10 சட்டசபை தொகுதிகளுக்கும் மொத்தம் 4,427 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் 100 மீட்டருக்குள் வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அரசியல் கட்சியினர் உள்பட யாரும் அந்த எல்லைக்குள் நின்று வாக்காளர்களிடம் பிரசாரம் செய்யக்கூடாது.
200 மீட்டர் தூரத்துக்கு அப்பால் அரசியல் கட்சியினர் பூத்சிலிப் வழங்கலாம்.
வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிகளில் எல்லைக்கோடு போடும் பணி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடங்கி நடந்து வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி உள்ளிட்ட மற்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.
தபால் ஓட்டு
80 வயதான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கும் பணி 70 சதவீதம் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story