மேட்டுப்பாளையம் பஸ்நிலைய விநாயகர் கோவிலில் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு பூஜை


மேட்டுப்பாளையம் பஸ்நிலைய விநாயகர் கோவிலில்  வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 11 March 2021 11:16 PM IST (Updated: 11 March 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் பஸ்நிலைய விநாயகர் கோவிலில் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் பஸ் நிலைய ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர், துர்க்கையம்மன் உள்பட பல்வேறு சாமிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்  சிவராத்திரியை யொட்டி இந்த கோவிலில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன.

நிகழ்ச்சியை யொட்டி முதல்கால பூஜை மாலை 7 மணிக்கு தொடங்கியது. விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைக்கு பின்னர் நந்தி பகவான் மற்றும்வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், விபூதி, குங்குமம், சந்தனம், பன்னீர் ஆகிய வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் மகாதீபாராதனை நடைபெற்றது. 

அன்னதானம் 

கோவில் தலைமை அர்ச்சகர் துரைசாமி தலைமையில் ரஞ்சித், மனோஜ் குமார் ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

 தொடர்ந்து இரவு 10 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 4.30 மணிக்கு வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன.


Next Story