பணகுடி அருகே கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
பணகுடி அருகே கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேலகடம்பன்குளம் கிராமத்தில் அதிகமான நிலம் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலங்களில் இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை அடிப்படையில் குடியிருந்து வருகின்றனர். அதற்கு உரிய தொகையை பொதுமக்கள் ஆண்டுதோறும் ஆதீன நிர்வாகத்திற்கு செலுத்தி ரசீது பெற்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதீன நிர்வாகம் பொதுமக்களிடம் குத்தகை கட்டணம் வசூலிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் குத்தகை கட்டணம் செலுத்த முன் வந்தாலும் அதனை ஆதீன நிர்வாகம் வாங்க மறுத்து வருவதாக தெரிகிறது.
இதை கண்டித்து கிராம மக்கள் அப்பகுதியில் கருப்பு கொடி ஏற்றி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சாமிதோப்பு தலைமைபதி அமைப்பு பாலஜனாதிபதி கலந்து பேசினார். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவில்லை என்றால் அய்யா வழி பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவதாக தெரிவித்துக்கப்பட்டது.
இந்த போராட்டத்தை தொடர்ந்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story