ராசிபுரத்தில் ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு


ராசிபுரத்தில் ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 12 March 2021 1:17 AM IST (Updated: 12 March 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ராசிபுரம்,

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ராசிபுரம் வட்டார வள மையம் சார்பில்  ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதற்கு ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுமதி முன்னிலை வகித்தார். வி.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் தேவராஜூக்கு முதல் பரிசும், பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி நந்திதாவுக்கு 2-ம் பரிசும், பாச்சி தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவி சவுமியாவுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டன.. இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள் லட்சுமி, கு.பாரதி, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story