இளையான்குடி,
இளையான்குடி வாள் மேல் நடந்த அம்மன் கோவில் திடலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்த வந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த இளையான்குடி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்ேபாது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் இளைஞர் அணி அமைப்பாளர் யோகநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேலுவிடம், எம்.பி.சி. இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்த அ.தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். தேர்தல் விதிமுறை இருப்பதால் தற்போது போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் நடத்த வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.