கொள்முதல் நிலையத்தில் நெல் மூடைகள் பாதிப்பு
கொள்முதல் நிலையத்தில் நெல் மூடைகள் பாதிப்பு
தளவாய்புரம்,
சேத்தூர் அருகே தேவதானம் கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு 40 கிலோ எடை கொண்ட சுமார் 500 நெல் மூடைகள் விவசாயிகளிடமிருந்து தினமும் கொள்முதல் செய்யப்படுகிறது. முதலில் இங்கு இரண்டு நாளுக்கு ஒருமுறை கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பப்பட்டது. தற்போது 10 நாட்கள் ஆகியும் இன்னும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பப்படவில்லை. இதனால் சுமார் 4 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் இங்கு ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள், கொள்முதலுக்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூடைகள் என அனைத்தும் நனைந்து விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு முன்புபோல் 2 நாட்களுக்கு ஒரு முறை கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகளை லாரிகள் மூலம் ஏற்றி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் தேக்கம் அதிகம் ஏற்படாது. மழையினாலும் பாதிப்பு ஏற்படாது என இப்பகுதி விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story