காரைக்காலில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்


காரைக்காலில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 12 March 2021 1:50 AM IST (Updated: 12 March 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

காரைக்கால், மார்ச்.12-
காரைக்காலில் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான மாணவர்களால் இந்த வகுப்புகளை பின்பற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு, அண்மையில் செய்முறைத் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான உத்தேசப் பட்டியலை புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் வகுப்புகள் முழுமையாக நடத்தப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகளையும் எல்லா மாணவர்களும் பின்பற்றவில்லை. தற்போது தேர்வுக்கு மாணவர்கள் தயாராகவில்லை.
எனவே கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் அல்லது திறந்த புத்தக முறையில் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story