அக்னி சட்டி தயாரிக்கும் பணி மும்முரம்
கோவில்களில் திருவிழாக்காலம் தொடங்கியதையடுத்து காரைக்குடி பகுதியில் அக்னி சட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
காரைக்குடி,
கோவில்களில் திருவிழாக்காலம் தொடங்கியதையடுத்து காரைக்குடி பகுதியில் அக்னி சட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கோவில் திருவிழாக்கள்
. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், திருப்புவனம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் விழாக்கள் தொடங்கி உள்ளன. இதில் தற்போது காரைக்குடி மற்றும் திருப்புவனம் பகுதியில் உள்ள கோவில்களில் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தாயமங்கலம் கோவில் திருவிழா விரைவில் தொடங்க உள்ளது.
அக்னி சட்டி தயாரிக்கும் பணி
இந்த நிலையில் காரைக்குடி அருகே கோட்டையூர் பைபாஸ் ரோடு பகுதியில் கோவில் திருவிழாவின் போது பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பயன்படுத்தப்படும் மண்ணால் செய்யப்பட்ட அக்னி சட்டிகள், ஆயிரம் கண் பானை, முளைப்பாரி ஓடு உள்ளிட்டவைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கோட்டையூரைச் சேர்ந்த பாண்டி என்பவர் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது-
தற்போது கோவில்களில் மாசி-பங்குனி திருவிழா தொடங்கி உள்ளதால் விழாவில் நேர்த்திக்கடனாக பக்தர்கள் பயன்படுத்தப்படும் அக்னிசட்டி, முளைப்பாரி ஓடு, ஆயிரம் கண் பானை உள்ளிட்ட பானைகளை மானாமதுரையில் தயாரிக்கப்பட்டு வரும் மண்பாண்ட கூடத்தில் இருந்து வாங்கி வந்து தற்போது அதற்கு வர்ணம் பூசி அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ரூ.100 முதல் ரூ.800வரை விற்பனை
இங்கு தயாரிக்கப்படும் இந்த நேர்த்திக்கடன் 3 முகம் கொண்ட பானை ரூ.100-ம், 7முதல் 16 முகம் கொண்ட பானைகள் வரை ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. இவ்வாறு தயாராகும் பானைகள் காரைக்குடி, தாயமங்கலம், சாக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், கொன்னையூர் ஆகிய பகுதியில் இருந்து பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். இதுதவிர விநாயகர் சதுர்த்தி காலங்களில் இங்கு விநாயகர் சிலைகளும், அய்யனார் கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மண் குதிரைகளும் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story