வாழை குளம் கண்மாய் 3-வது முறையாக நிரம்பியது
மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் 3-வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் 3-வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வாழை குளம் கண்மாய்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் உள்ளது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் வாழை குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் மம்சாபுரம் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த கண்மாய் கடந்த 2 மாதத்தில் 2 தடவை நிரம்பியது. இந்தநிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக 3-வது முைற நிரம்பி மறுகால் பாய்கிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வாழை குளம் கண்மாயை நம்பி எண்ணற்ற விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த மாதத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த கண்மாய் 2 முறை நிரம்பியது.
இந்தநிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையினால் கண்மாய் 3-வது முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது. தொடர்ந்து கண்மாய் நிரம்பி வருவதால் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story