நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.55 ஆயிரம் பறிமுதல்
நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.55 ஆயிரம் பறிமுதல்
வாடிப்பட்டி
சட்டமன்ற தேர்தலையொட்டி 3 பறக்கும்படை மற்றும் நிலைக்கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு சோழவந்தான் தொகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சோழவந்தான்- நகரி சாலையில் பறக்கும்படை அதிகாரி வேளாண்மை உதவி இயக்குனர் வாசுகி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், ஏட்டுகள் மணிராஜா, ரேணுகாதேவி ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் சோதனை செய்தபோது உரிய ஆவணம் இன்றி ரூ.55,900 இருந்தது. அதை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். விசாரணையில் அலங்காநல்லூர் அழகாபுரியை சேர்ந்த பெருமாள்(35) என்பதும், தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார்நிலை கரூவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story