அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
வாடிப்பட்டி
சமயநல்லூர் அருகே பரவை மேலவெளிவீதியை சேர்ந்தவர் ஜெய மணி. இவரது மகன் அஜித்(வயது 23). இவர் பாண்டிகோவில் அருகில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் மதுரையிலிருந்து பரவைக்கு மோட்டார் சைக்கிள் சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் கணேசன் பின்புறம் அமர்ந்து வந்தார். மோட்டார் சைக்கிள் பரவை சரவணாநகர் பிரிவில் வந்தபோது அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அஜித் சம்பவ இடத்திேலயே இறந்தார். கணேசனுக்கு லோசன காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story