வக்கீல்களுக்கு கொரோனா தடுப்பூசி
வக்கீல்களுக்கு கொரோனா தடுப்பூசி
மதுரை
கொரோனா தடுப்பூசியை 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், முன்களப் பணியாளர்களுக்கும் செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வக்கீல்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மதுரை வக்கீல் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று மதுரை வக்கீல்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மதுரை வக்கீல்கள் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் வக்கீல்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு அரசு மருத்துவமனை நுரையீரல் பிரிவு சிறப்பு மருத்துவர் பிரபாகர் தொடங்கி வைத்தார். இதில் மதுரை வக்கீல்கள் சங்கத்தலைவர் நெடுஞ்செழியன், செயலாளர் ேமாகன்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முதல்கட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். தொடர்ந்து இன்றும் தடுப்பூசி ேபாடப்படுகிறது. முதல்கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் 8-ந்தேதி மற்றும் 9-ந்தேதிகளில் 2-ம் கட்ட தடுப்பூசி போட வேண்டும். இதுகுறித்து சங்க செயலாளர் மோகன்குமார் கூறுகையில், தமிழகத்தில் முதன்முதலில் மதுரை வக்கீல்களுக்கு தான் ெமாத்தமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story