கும்பகோணத்தில் கிலோ ரூ.20-க்கு தர்பூசணி பழம் விற்பனை
சுட்டெரிக்கும் வெயிலால் கும்பகோணத்தில் கிலோ ரூ.20-க்கு தர்பூசணி பழம் விற்பனை நடைபெறுகிறது.
கும்பகோணம்:
சுட்டெரிக்கும் வெயிலால் கும்பகோணத்தில் கிலோ ரூ.20-க்கு தர்பூசணி பழம் விற்பனை நடைபெறுகிறது.
சுட்டெரிக்கும் வெயில்
கோடைக்காலம் என்றாலே பொதுவாக பொதுமக்கள் குளிரான பொருட்களை நாடி செல்வது வழக்கம். கோடை வெயிலுக்கு இதமாக பழரச பானங்கள், தர்பூசணி பழம், நுங்கு, வெள்ளரிபிஞ்சு உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிடுவார்கள். தற்போது குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பகலில் பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திற்கு இதமாக இளநீர், வெள்ளரிபிஞ்சு, தர்பூசணி பழம் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
கிலோ ரூ.20-க்கு விற்பனை
தற்போது கும்பகோணத்திற்கு திண்டிவனம் பகுதியில் இருந்து ஏராளமான தர்பூசணி பழங்களை வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த பழங்களை சாப்பிட்டால் வெயிலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியதாகவும், புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இதனால் பொதுமக்கள் தர்பூசணி பழத்தை ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். கோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு கும்பகோணம் புதிய பஸ்நிலையம், பழையபஸ்நிலையம், மகாமகக்குளம், கடைவீதி, தாராசுரம், பழைய மீன்மார்க்கெட், ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தர்பூசணி பழங்கள் விற்பனை நடந்து வருகிறது. கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு துண்டு பழம் ரூ.10 மற்றும் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story