மதுரை தெற்கு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் பூமிநாதன்


மதுரை தெற்கு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் பூமிநாதன்
x
தினத்தந்தி 12 March 2021 2:24 AM IST (Updated: 12 March 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தெற்கு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் பூமிநாதன்

மதுரை
ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டார். அதில் மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன் போட்டியிடுகிறார். அவரது தந்தை பெயர் முனியாண்டி. ெசாந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் அரியமங்கலம், மனைவி பெயர் சூரியகாந்தாள், 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தற்போது மதுரை கோ.புதூர் வசித்து வருகின்றார். 61 வயதான இவருக்கு தொழில் விவசாயம், 1988-ல் தி.மு.க. மதுரை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர், 1991-ல் தி.மு.க. வட்ட செயலாளர், 1992-ல் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர், 1993-ல் ம.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், 1999 முதல் தற்போது வரை 22 வருடங்களாக ம.தி.மு.க. மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். 2002-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி திருமங்கலம் பொது கூட்டத்தில் விடுதலைபுலிகளை ஆதரித்து பேசியதற்காக 18 மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். ஏற்கனவே, 2006-ல் மதுரை தெற்கு தொகுதியில் 52 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 2016-ல் மீண்டும் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு 3-ம் இடம் பிடித்தார். இப்போது மீண்டும் 2021-ல் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

Next Story