நீலகிரி மலைப்பகுதியில் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 329 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 93.49 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று காலை 6 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 466 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 93.33 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது, கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட 3-ம் கட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story