திருவானைக்காவல் கோவிலில் 16-ந்தேதி பங்குனி தேரோட்டம் எட்டுத்திக்குகளிலும் கொடியேற்றம்


திருவானைக்காவல் கோவிலில் 16-ந்தேதி பங்குனி தேரோட்டம் எட்டுத்திக்குகளிலும் கொடியேற்றம்
x
தினத்தந்தி 12 March 2021 3:28 AM IST (Updated: 12 March 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

திருவானைக்காவல் கோவிலில் 16-ந்தேதி பங்குனி தேரோட்டம் நடை பெறுவதையொட்டி எட்டுத்திக்குகளிலும் கொடியேற்றம் நடைபெற்றது

திருவானைக்காவல் கோவிலில்
16-ந்தேதி பங்குனி தேரோட்டம்
எட்டுத்திக்குகளிலும் கொடியேற்றம்
ஸ்ரீரங்கம், மார்ச்.12-
பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். பிரம்மோற்சவ விழா கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் ஏப்ரல் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பங்குனி தேரோட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் நேற்று கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. எட்டுத்திக்கு கொடியேற்றத்தையொட்டி உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு சோமாஸ்கந்தர் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story