தொப்பூர் அருகே ரெயில் மோதி வாலிபர் சாவு போலீசார் விசாரணை
தொப்பூர் அருகே ரெயில் மோதி வாலிபர் சாவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story