பழனி எம்.எல்.ஏ. வீட்டின் அருகே அ.தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
பழனி எம்.எல்.ஏ. வீட்டின் அருகே அ.தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்படுத்தியது.
பூந்தமல்லி,
படப்பையை அடுத்த ஒரத்தூரை சேர்ந்தவர் சுந்தர் (வயது 56). அ.தி.மு.க. பிரமுகரான இவர் குறித்து சமீப காலமாக சமூக வலைதளங்களில் அவதூறான செய்திகளை மர்ம நபர்கள் சிலர் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. தனது கட்சியை சேர்ந்த யாரோ சிலர்தான் தனது வளர்ச்சி பிடிக்காமல் இவ்வாறு அவதூறு பரப்பி வருவதாக கருதிய சுந்தர், இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவர் இதனை கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த சுந்தர், நேற்று போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. பழனி வீட்டின் அருகே உள்ள அவரது அலுவலகத்தின் முன்பு திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியதுடன், அவரது உடலில் தண்ணீரை ஊற்றினார்கள்.
பின்னர் அங்கிருந்த அ.தி.மு.க.வினர் சுந்தரை சமாதானம் செய்து, தேர்தல் வேலைகளை பார்க்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story