ஆற்காட்டில் தேர்தல் நடவடிக்கையால் பத்திரப்பதிவு குறைந்தது


ஆற்காட்டில் தேர்தல் நடவடிக்கையால் பத்திரப்பதிவு குறைந்தது
x
தினத்தந்தி 12 March 2021 6:12 PM IST (Updated: 12 March 2021 7:03 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் தேர்தல் நடவடிக்கையால் பத்திரப்பதிவு எண்ணிக்கை குறைந்து உள்ளது.

ஆற்காடு,

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் கண்காணிப்பு குழு, பறக்கும் படை அமைத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர். 

இதனால் ஆற்காடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு எண்ணிக்கை குறைந்து உள்ளது. சொத்துக்களை வாங்குவதற்கோ, விற்ற பணத்தை எடுத்துசெல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும், பண பரிவர்த்தனை செய்ய முடியாததாலும் பத்திரப்பதிவு குறைவாக காணப்படுகிறது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story