எட்டயபுரம் அருகே 17½கிலோ கஞ்சா பதுக்கியர் கைது
எட்டயபுரம் அருகே, 17½கிலோ கஞ்சா புதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூரைச் சேர்ந்த உத்திரகுமார் (வயது 58) என்பவருக்கு சொந்தமான கலர் சோடா நிறுவனத்தின் பின்புறம் உள்ள ஷெட்டில் 17½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு உத்திரகுமாரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story