சிலம்பாட்ட போட்டி உடன்குடி வீரர்கள் சாதனை


சிலம்பாட்ட போட்டி உடன்குடி வீரர்கள் சாதனை
x
தினத்தந்தி 12 March 2021 7:24 PM IST (Updated: 12 March 2021 7:24 PM IST)
t-max-icont-min-icon

சிலம்பாட்ட போட்டியில் உடன்குடி வீரர்கள் சாதனை

உடன்குடி:
வேர்ல்டு யூனியன் சிலம்பம் பெடரேசன் மற்றும் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு சார்பாக, உலக சாதனைக்கான சிலம்பம் போட்டி மதுரையில் நடைபெற்றது. இதில் உடன்குடி, குலசேகரன்பட்டினத்தில் செயல்படும் அல்-ஹூதா சிலம்பம் அகாடமி வீரர்கள் மாஸ்டர் தவ்பீக், செல்வஜோதி, கம்சா நெய்னா, தன்ஷிகா லீனா ஆகியோர் தொடர்ந்து 4 மணி நேரம் சிலம்பம் மற்றும் சுருள்வாள் சுற்றி சாதனை படைத்தனர். வீரர்களுக்கு சான்றிதழ்களை குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிர்வாகிகள் சாந்தா, வள்ளி ஆகியோர் வழங்கினர். வீரர்களை அல்ஹூதா சிலம்பம் அகாடமி நிறுவனர் என்.ஜமால், என்.தவ்பிக் மற்றும் ஊர்மக்கள் பாராட்டினர்.

Next Story