மங்களநாயகி கண்ணகி தேவி கோவிலில் மகா சிவராத்திரி விழா


மங்களநாயகி கண்ணகி தேவி கோவிலில் மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 12 March 2021 8:32 PM IST (Updated: 12 March 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப் அருகே மங்களநாயகி கண்ணகி தேவி கோவிலில் மகா சிவராத்திரி விழா


கூடலூர்:

லோயர்கேம்ப் அருகே பளியன்குடியில் அமைந்துள்ள மங்களநாயகி கண்ணகி தேவி கோவிலில் மாசி மாத மகாசிவராத்திரி விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் விழாவில் மங்களநாயகி கண்ணகி தேவிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
 இதேபோல் ஆதிசக்தி அன்னை கண்ணாத்தாள், ஆதிசக்தி கருப்பசாமி மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் 61 பல்லயங்கள் இட்டு பூஜைகள் செய்யப்பட்டது. 

நள்ளிரவில் தாமரை கமலஜோதி லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. 2-ம் நாளான நேற்று ஆதிசக்தி கருப்பனுக்கு கிடாவெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி கந்தவேல் நவரிஷி செய்திருந்தார். விழாவில் கூடலூர், லோயர்கேம்ப், வெட்டுக்காடு, நாயக்கர் தொழு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story