விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து செலவின பார்வையாளர்கள் ஆலோசனை
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து செலவின பார்வையாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
விழுப்புரம்,
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர்களாக ஆசிப் கர்மாலி, அருண்கண்டி தத்தா, ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலகமான கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அங்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரையுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆய்வு
அதனை தொடர்ந்து தேர்தல் தொடர்பான அரசியல் கட்சி விளம்பரங்களை கண்காணிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊடக சான்றளிப்பு கண்காணிப்பு குழு மையத்தையும் பார்வையிட்டனர்.
மேலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் அளித்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சந்தேகங்கள், வாக்குச்சாவடி மையம் தொடர்பான சந்தேகங்கள் உள்பட பல்வேறு தகவல்களை அறிந்திட அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர வாக்காளர் சேவை மைய அறையையும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story