திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம்


திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 12 March 2021 10:25 PM IST (Updated: 12 March 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள்  ஆலோசனை கூட்டம் நடந்தது. 
செலவின பார்வையாளர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கேயம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக அமித் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 99692 38160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவரை தாராபுரத்தில் பொதுப்பணித்துறையினரின் ஆய்வு விடுதியில் சந்திக்கலாம். அவினாசி, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு சுகாசினி கோத்மர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 85859 59900 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவரை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு பயணியர் விடுதியில் அறை எண்.5-ல் சந்திக்கலாம்.
திருப்பூர் தெற்கு, பல்லடம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக ஷியாம் பிரசாத் கட்டிபள்ளி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 81601 44877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு பயணியர் விடுதியில் அறை எண்.6-ல் சந்திக்கலாம். உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பார்வையாளராக பசந்த்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 94148 88752 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். உடுமலையில் பொதுப்பணித்துறையினரின் ஆய்வு விடுதியில் சந்திக்கலாம்.
ஆலோசனை
இந்த நிலையில் அவினாசி, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் சுகாஷினி கோத்மர் மற்றும் உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் பசந்த்குமார், திருப்பூர் தெற்கு, பல்லடம் சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் ஷியாம் பிரசாத், கட்டிப்பள்ளி ஆகியோர் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயனை சந்தித்து ஆலோசனை செய்து ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story