தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்
தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தர்மபுரி,
தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை அங்காள பரமேஸ்வரி அம்மன்- தாண்டவேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இரவு அம்மன் திருக்கல்யாண கோலத்துடன் கண்ணாடி ரதம்-பூத வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான இன்று (சனிக்கிழமை) பூத வாகனத்தில் அங்காளம்மன் பயணம் செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பச்சையம்மன் கோவில் மயானத்தில் மயான கொள்ளை திருவிழா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மபுரி வெளிப்பேட்டை தெரு வாணியர் சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story