மேட்டுப்பாளையம் கோவை இடையே 15 ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது


மேட்டுப்பாளையம் கோவை இடையே 15 ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 13 March 2021 1:21 AM IST (Updated: 13 March 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் கோவை இடையே வருகிற 15 ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, பெரியநாயக்கன் பாளையம், துடியலூர் வழியாக கோவைக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

 கொரோனா காரணமாக  கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. 

தற்போது கொரோனா குறைந்து உள்ளதால் வருகிற 15-ந் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ரெயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் பயணிகள் ரெயில் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு உள்ளதால் ரூ.30 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  

மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரெயில், காரமடை, வடகோவை ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 


Next Story