விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கொரடாச்சேரி அருேக விஷம் குடித்து வாலிபா் தற்கொலை செய்து ெகாண்டாா்.
கொரடாச்சேரி,
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பனை சேர்ந்தவர் அசோக். இவரது சகோதரர் விஜயகாந்த் (வயது28). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் விஜயகாந்த் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த விஜயகாந்த் வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கினார். இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அசோக் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story