9 சட்டமன்ற தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் இல்லை
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் இல்லை
திருச்சி, மார்ச். 13-
திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் வேட்பாளர்கள் ஒருவர் கூட நேற்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மட்டும் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story