வீரவநல்லூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது; 11 பவுன் மீட்பு


வீரவநல்லூரில்  தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது; 11 பவுன் மீட்பு
x
தினத்தந்தி 13 March 2021 1:39 AM IST (Updated: 13 March 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் சுப்பிரமணியபுரம் தெருவை சேர்ந்தவர் வேம்பு (வயது 67). இவர் கடந்த மாதம் 6-ந் தேதி காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றார்.

இதேபோல் கடந்த 2-ந் தேதி வெள்ளாங்குளி பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (24) என்பவர் காலையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரது சங்கிலியை பறித்து சென்றார்.

இதுகுறித்த புகார்களின் பேரில் வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வெள்ளாங்குளி பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் முத்துகணேஷ் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 பவுன் தங்க நகைககளை போலீசார் மீட்டனர்.

Next Story