3 பேருக்கு 2 வருட ஜெயில்
3 பேருக்கு 2 வருட ஜெயில்
விருதுநகர்,
ராஜபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி (வயது 57), சூலக்கரையை சேர்ந்த லட்சுமணன் (24), வீரபாண்டி (50), ஆர்யராஜ் (48) ஆகிய 4 பேரும் பலரிடம் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்ச ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலை ஏதும் வாங்கித்தராத நிலையில் பாதிப்படைந்தவர்கள் இதுபற்றி சூலக்கரை போலீசில் புகார் செய்தனர். கடந்த 2001-ம் ஆண்டு இதுபற்றி சூலக்கரை போலீசார் இவர்கள் 4 பேர் மீதும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது ஆரியராஜ் இறந்துவிட்டார். இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி சரண் நேற்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story