கரும்புகள் தீயில் எரிந்து நாசம்
கரும்புகள் தீயில் எரிந்து நாசமானது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரைப்பாக்கம் கிராமத்தில் பெரும் அளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மின்கம்பி உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள கரும்பு வயலில் தீப்பிடித்துள்ளது. அதனை யாரும் கவனிக்காத நிலையில், அருகே உள்ள மற்ற வயல்களுக்கும் தீ பரவியது. இதில் சுமார் 8 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிர் தீப்பற்றி எரிந்து நாசமானது. இதில் காரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அபூர்வ கண்ணன் (30) என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர், ராஜா (55) என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர், சண்முகம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர், குமாரசாமி என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் என அனைத்து வயல்களிலும் கரும்பு பயிர்கள் தீயில் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story