முதல் நாளில் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
முதல் நாளில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
அரியலூர்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் அரியலூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 11 மணிக்கு தேர்தல் அதிகாரி ஏழுமலை மனுக்களை வாங்க தயாராக இருந்தார். ஆனால் மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை. அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு மார்க்கெட் தெருவில் இருபுறமும் போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை வேறு பாதைக்கு மாற்றிவிட்டனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த தற்காலிக கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. ஜெயங்கொண்டம் தொகுதியில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
Related Tags :
Next Story