ஆலங்குளம் அருகே விபத்தில் பெயிண்டு கடைக்காரர் பலி


ஆலங்குளம் அருகே  விபத்தில் பெயிண்டு கடைக்காரர் பலி
x
தினத்தந்தி 13 March 2021 2:23 AM IST (Updated: 13 March 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே விபத்தில் பெயிண்டு கடைக்காரர் பலியானார்.

ஆலங்குளம்:

பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது 42). இவர் அப்பகுதியில் பெயிண்டு கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 

மகா சிவராத்திரியை முன்னிட்டு மீனாட்சி சுந்தரம் தனது மகன் அபிஷேக்குடன் இருசக்கர வாகனத்தில் முக்கூடல் பகுதியில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று விட்டு அதிகாலையில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அத்தியூத்து அருகே உள்ள தவிட்டு மில்லிற்கு தூத்துக்குடியில் இருந்து புண்ணாக்கு ஏற்றி வந்த லாரி அத்தியூத்து பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தது.

இதனை கவனிக்காத மீனாட்சிசுந்தரம் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மீனாட்சிசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மீனாட்சி சுந்தரத்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

Next Story