கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு வரவேற்பு


கடையநல்லூரில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 13 March 2021 2:26 AM IST (Updated: 13 March 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அச்சன்புதூர்:

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ள து. இந்த நிலையில் கடையநல்லூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக முகம்மது அபுபக்கர்  எம்.எல்.ஏ. அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் வேட்பாளர்களுக்கு சால்வை அணிவித்தும், மலர் கொத்து வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Next Story