கோவை தெற்கு தொகுதியின் கமல்ஹாசன் போட்டியிடுவது ஏன் துணைத்தலைவர் மகேந்திரன் பேட்டி


கோவை தெற்கு தொகுதியின் கமல்ஹாசன் போட்டியிடுவது ஏன் துணைத்தலைவர் மகேந்திரன் பேட்டி
x
தினத்தந்தி 13 March 2021 7:14 AM IST (Updated: 13 March 2021 7:18 AM IST)
t-max-icont-min-icon

கோவை தெற்கு தொகுதியின் கமல்ஹாசன் போட்டியிடுவது ஏன் என்று துணைத்தலைவர் மகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

கோவை,

சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் அதன் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 21.6.1963-ம் ஆண்டு பொள்ளாச்சியில் பிறந்தார். 

இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.டி. முடித்து உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கோவை தொகுதியில் போட்டியிட்டு 3-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற தகவல் எங்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. நானும் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். கோவை மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.

 கோவையின் தன்மை என்னவென்றால் ஒரு மாற்றத்துக்கு முன்னோடியாக கோவை மக்கள் இருந்திருக்கிறார்கள். அதாவது அரசின் எந்த உதவியும் இல்லாமல் கோவையில் பல தொழில் முனைவோர்கள் உருவாகியிருக்கிறார்கள். 

அதுபோல அரசியலில் ஒரு மாற்றத்துக்கு எங்கள் தலைவர் இங்கு போட்டியிடுவதின் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைத்தோம். அதை ஏற்று அவர் கோவையில் போட்டியிடுகிறார்.

அரசியலில் கறைபட்ட கையோடு நாங்கள் கைகோர்க்க மாட்டோம். ஆனால் எங்களோடு தொகுதி உடன்பாடுக்காக வந்தவர்களோடு பேசுவதில் தவறில்லை.  தே.மு.தி.க.வோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

 ஆனால் யார் வந்தார்கள், வரவில்லை என்று சொல்ல மாட்டோம். கடந்த 50 ஆண்டுகளாக நடந்த ஆட்சிகளுக்கு மாற்றம் வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை கொண்டு வர மக்கள் நீதி மய்யம் பாடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story