சங்ககிரி அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதி கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது
சங்ககிரி அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதி கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சங்ககிரி,
சங்ககிரி அருகே வி.என்.பாளையம் பகுதியில் சமீபத்தில் சாலை அகலப்படுத்தப்பட்டு நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து சேலம் நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. அதனை திருப்பூர் பகுதியை சேர்ந்த டிரைவர் முருகன் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். சங்ககிரி வி.என்.பாளையம் அருகே வந்தபோது சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் கன்டெய்னர் லாரி மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் முருகன் லேசான காயத்துடன் தப்பினார். மேலும் அந்த பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், தடுப்புச்சுவரின் மீது கருப்பு, வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story