கட்டிடத்தொழிலாளியை காரில் கடத்தி செல்போன் பறிப்பு 3 பேர் கைது


கட்டிடத்தொழிலாளியை காரில் கடத்தி செல்போன் பறிப்பு 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 March 2021 5:24 AM (Updated: 13 March 2021 5:24 AM)
t-max-icont-min-icon

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் தங்கி இருந்து கட்டிட தொழில் செய்து வந்தார்.

சென்னை, 

வட மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்திரகுமார் (வயது 23). இவர், சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் தங்கி இருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். இவர், கடந்த 9-ந் தேதி இரவு கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அங்கு வந்து மகேந்திரகுமாரை காரில் கடத்திச் சென்றனர். சிறிது தூரம் சென்றதும், மகேந்திரகுமாரின் செல்போனை பறித்தனர். பின்னர் அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு, அவரை காரில் இருந்து கீழே தள்ளி விட்டனர். பின்னர் காரில் அவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் மகேந்திரனை கடத்திச் சென்று செல்போன் பறித்த 3 பேர் யார் என்று கண்டுபிடித்தனர். தியாகராயநகரைச் சேர்ந்த மகேஷ் (32), சந்திரசேகர் (29), சவுந்திரராஜன் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். செல்போன் மீட்கப்பட்டது.

Next Story