குண்டடம் வாரச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பால் விலைவீழ்ச்சி
குண்டடம் வாரச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சியடைந்தது
குண்டடம்
குண்டடம் வாரச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சியடைந்தது
மாடு விற்பனை
குண்டடத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை மதியம் 11 மணிமுதல் மாலை 4 மணி வரை மாட்டுச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு குண்டடம், காங்கேயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம், பூளவாடி, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள் விற்பனைக்காக மாடுகளை கொண்டு வருகின்றனர். இவற்றை ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் தாங்கள் வைத்திருக்கும் மாடுகளின் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அதிகளவில் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதே நேரத்தில் வளர்ப்பு மாடுகள் மற்றும் கிடேரிகளை வாங்குவோர் எண்ணிக்கு குறைந்துள்ளது. இதனால் மாடுகளின் விலை குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் ரூ.40ஆயிரம் வரை விலைபோன கறவை மாடுகள் இந்த வாரம் ரூ.30 ஆயிரம் வரையே விலைபோனது. ரூ.20 ஆயிரம் வரை விலைபோன வளர்ப்புக் கிடேரிகள் இந்த வாரம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாகவே விலை போனது.
இந்த சந்தையில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிவரை ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுகிறது. சந்தைக்கு நேற்று ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்தது. மேலும் இறைச்சி கடைகளில் விற்பனை குறைவாக இருப்பதால் இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் கட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10கிலோ எடையுள்ள 1 ஆடு ரூ.7ஆயிரத்து விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.6 ஆயிரத்திற்கு விலைபோயுள்ளது. அதே போல் கடந்த வராம் 1 கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விலைபோன கோழி இந்த வாரம் ரூ.270 முதல் ரூ.320 வரை விலைபோனது.
பயறு வகைகள்
இந்த சந்தைக்கு தட்டை, கொள்ளு, உளுந்து, பாசிப்பயிறு, உள்ளிட்ட பயிர்வகைகளை, வார சந்தைக்கு விற்பனைக்காக சுற்றுவட்டார விவசாயிகள் அதிகளவில் கொண்டு வந்திருந்தனர். அதன்படி இந்த வாரம் பாசிப்பயிறு கிலோ ரூ. 130-க்கும், உளுந்து கிலோ ரூ.70-க்கும், தட்டைப்பயிறு கிலோ ரூ. 80-க்கும் விற்பனையானது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் பயிர்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story