நாமக்கல் மாவட்டத்தில் 952 துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு


நாமக்கல் மாவட்டத்தில் 952 துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 13 March 2021 7:24 PM IST (Updated: 13 March 2021 7:24 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 952 துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். அதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உரிமத்துடன் இருந்த 1,003 துப்பாக்கிகளில் கடந்த 4-ந் தேதி வரை 800 துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன. இதனிடையே நேற்று  வரை 952 துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். வங்கி பாதுகாவலர்கள் உள்ளிட்ட விதிவிலக்கு உள்ளவர்களை தவிர்த்து மாவட்டத்தில் உரிமத்துடன் துப்பாக்கிகளை வைத்திருந்த அனைவரும் துப்பாக்கிகளை ஒப்படைத்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story