100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு


100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 13 March 2021 7:46 PM IST (Updated: 13 March 2021 7:46 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகம் பொறித்த பேட்ஜ் அணிந்து, வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகம் பொறித்த பேட்ஜ் அணிந்து, வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இலக்கு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கை கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
அந்த வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் சட்டமன்ற தேர்தல் நாள் ஏப்ரல் 6, 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் பொறித்த பேட்ஜ்களை அணிந்து கொண்டனர்.
மேலும், தேர்தலின் மாண்பை நிலைநிறுத்தி, எவ்வித அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என கலெக்டர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

கையெழுத்து இயக்கம்

இதனை தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இதில் அனைத்து அரசு அலுவலர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சிவகாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பழனிகுமார், ரகுவீரகணபதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Next Story