திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 13 March 2021 7:51 PM IST (Updated: 13 March 2021 7:51 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்கள் போட்டி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

திருச்செந்தூர், மார்ச்.14-
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சங்கம் சார்பில், மாணவர்கள் போட்டி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், ‘டெஸ்ட் ஆப் ரீசனிங்’ என்ற தலைப்பில் பகுத்தறிவு சோதனை குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாயசித்ரா வரவேற்று பேசினார்.
போட்டி தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் பகுத்தறிவு சோதனை வினாக்களுக்கு எளிதில் தீர்வு காண்பது குறித்து கணிதவியல் துறை தலைவர் பசுங்கிளி பாண்டியன் விளக்கி கூறினார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story