உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போத்தனூர்,
தேர்தல் நடத்தை விதிமீறலை கண்காணிக்க, பறக்கும் படை உள்பட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவையை அடுத்த கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை-பாலக்காடு ரோடு மதுக்கரை சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகாவில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி தமிழக பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரி வந்தது. அதை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில் ரூ.56 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்தன. ஆனால் அவற்றை கேரளாவுக்கு கொண்டு செல்வதற்கு உரிய ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து வெளிநாட்டு மதுபாட்டில்களை ஏற்றி வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வாகனம் மற்றும் மது பாட்டில்களை மதுக்கரை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அம்சவேணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக லாரி டிரைவரான சென்னையை சேர்ந்த முருகன் (40) என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story