உத்தம்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
உத்தம்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
உத்தம்பாளையம் :
கம்பம், போடி தொகுதி தேர்தல் செலவின கணக்கு பார்வையாளராக மானஸ் மண்டல் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர் நேற்று கம்பம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகமான உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, தேர்தல் நடத்தும் அதிகாரி சக்திவேலிடம் இருதொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் தேர்தல் ஆணைய உத்தரவுகளை வேட்பாளர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும், அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது கம்பம் தொகுதிக்கான உதவி தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் துரை, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி உதயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story