தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் விருப்பமனு அளிக்கலாம்
ேதர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் விருப்ப மனு அளிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு பணியாற்ற விருப்பமுள்ள 65 வயது நிரம்பாத முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் விருப்ப மனு அளிக்கலாம். அவ்வாறு தேர்தல் பணி செய்பவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும். மேலும் அவர்கள் தேர்தலில் தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்தல் பாதுகாப்பு பணி செய்ய விருப்பமுள்ளவர்கள் தங்கள் விருப்ப மனுவுடன், வாக்காளர் அடையாள அட்டையின் நகலை இணைத்து வழங்க வேண்டும்.
தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் ஆகியோர் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாளை 83000 06260 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து விருப்ப மனு அளிக்கலாம். இதேபோல் விளாத்திகுளம், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் ஆகியோர் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமியை 94981 95709 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து விருப்ப மனு அளிக்கலாம்.
ஓய்வுபெற்ற காவல்துறையினர், இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிர்ஜித் மேரியை 94883 23426 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து விருப்ப மனு அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 0461- 2341248 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story